கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில், வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் என்பவரிடம் விஏஓ இராமச்சந்திரன் மற்றும் நில அளவையர் வளையாபதி லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.