தூங்கிக் கொண்டிருந்த மெடிக்கல் மாணவி மீது, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய டிராக்டர் டிரைவர். லேசான காயத்துடன் உயிர் தப்பிய மாணவி. நள்ளிரவில் மாணவி மீது இளைஞர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியது ஏன்? மாணவி மீது டிராக்டர் டிரைவருக்கு என்ன வன்மம்? டிராக்டர் டிரைவர் பிடிபட்டாரா?நைட் 11.30 மணிக்கு கல்லூரி மாணவி, அவங்களோட அப்பா, அம்மா எல்லாரும் ஆழ்ந்து தூங்கிட்டு இருந்துருக்காங்க. மாணவி தனியறையிலயும், அவங்க அம்மா அப்பா வேற அறையிலயும் தூங்கிட்டு இருக்கப்ப, மாணவியோட ரூம் ஜன்னல் வழியா எட்டிப்பாத்த ஒரு இளைஞன், கொதிக்கிற எண்ணெய்யை ஊத்திட்டு ஓடிருக்கான். மாணவியோட அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த பெற்றோர், இளைஞரை மடக்கி பிடிச்சி போலீஸ்ல ஒப்படைச்சதோட மகளை மைலம்பட்டி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல சிகிச்சைக்காக சேத்துருக்காங்க. அதுக்குப்பிறகு அந்த இளைஞர்கிட்ட போலீசார் விசாரணை நடத்திருக்காங்க. அதுல தான், கல்லூரி மாணவிமேல கொதிக்கிற எண்ணெய்யை ஊத்துனதுக்கான காரணமே தெரியவந்துச்சு..கரூர், குளக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயசு கல்லூரி மாணவி திருச்சியில உள்ள ஒரு பிரைவேட் காலேஜ்ல B.PHARM 4ஆம் ஆண்டு படிச்சிட்டு இருக்காங்க. ஹாஸ்ட்ல்ல தங்கி இருந்து படிக்கிற மாணவி விடுமுறை நாட்கள்ல மட்டும் ஊருக்கு வந்துருக்காங்க. தன்னோட கிராமத்துல உள்ள இளைஞர் ரஞ்சித்தை காதலிச்சிட்டு இருந்துருக்காங்க மாணவி. டிராக்டர் டிரைவரா இருக்குற ரஞ்சித் தினமும் செல்போன்ல பேசி காதலை வளத்துட்டு இருந்துருக்காரு. இதுக்கு மத்தியில மாணவி, இன்ஸ்டாவுல நிறைய பிரண்ட்ஸ்கூட பேசுனதா சொல்லப்படுது. எந்நேரமும் இன்ஸ்டாவுலயே இருக்குறன்னு சத்தம்போட்ட ரஞ்சித், பசங்ககிட்ட பேசக்கூடாதுனும் கண்டிச்சிருக்காரு. தன்கூட படிக்கிற பசங்க தான், நண்பர்களா தான் பேசுறேனு சொல்லிருக்காங்க மாணவி. அனா, அத காது குடுத்து கேக்காத ரஞ்சித் மாணவிக்கிட்ட நித்தம் சண்டை போட்டதா தெரியுது. யாரு கிட்டயும் பேசக்கூடாது, பழகக்கூடாதுனு எப்படி சொல்லலாம்? கூட படிக்கிற நண்பர்கள்கூட பிரண்ட்லியாகூட பேசக்கூடாதானு பதிலுக்கு சண்டைபோட்ட மாணவி, சந்தேகப்பட்டுட்டு இருந்ததால, லவ்வே வேண்டாம்னு பிரேக்கப் பண்ணிருக்காங்க. அதுக்குப்பிறகு சில மாதங்களா ரஞ்சித் கிட்ட பேசுறத மொத்தமாவே ஸ்டாப் பண்ணிருக்காங்க. அதனால கடுப்பான ரஞ்சித் தற்கொலை முயற்சியில ஈடுபட்டதா சொல்லப்படுது.தகுந்த நேரத்துல காப்பாத்துன நண்பர்கள், ரஞ்சித்துக்கு அறிவுரையும் சொல்லிருக்காங்க. காதல் மட்டும்தான் வாழ்க்கையா? அதுக்காக முட்டாள்தனமா உயிரை விடுவாங்களா? நீ உயிரிழந்துட்டா உன் குடும்பத்துல உள்ளவங்களுக்குதான் இழப்பு, மாணவியோட குடும்பத்துல உள்ளவங்களுக்கு இழப்பு கிடையாதுனு நண்பர்கள் அட்வைஸ் பண்ணதும் ரஞ்சித்துக்கு மனசு மாறிருக்குது.பிரேக்கப் பண்ணின மாணவியே உயிரோட இருக்கும்போது நான் ஏன் தற்கொலை பண்ணிக்கணும்னு நினைச்ச ரஞ்சித், அந்த யோசனையோடவே நிறுத்திருக்கலாம். அத தாண்டி குரூரமா யோசிச்சது தான் அவர சிறையில கம்பி எண்ற நிலைக்கு தள்ளிருக்குது.உடல்நிலை சரியில்லாததால் காலேஜ்ல லீவு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துருக்காங்க மாணவி. அத தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்ட ரஞ்சித், எண்ணெய்யை தகதகனு அடுப்புல கொதிக்க வச்சி, நடுராத்திரி அந்த எண்ணெயோட மாணவியோட வீட்டுக்கு வந்துருக்காரு. மாணவி ரூம் பக்கம் போன ரஞ்சித், ஜன்னல் வழியா கொதிக்கிற எண்ணெயை அவங்கமேல ஊத்திருக்காரு. அரை தூக்கத்துல இருந்த மாணவி உஷாரா விலகினதால லேசான காயம் மட்டும்தான் ஏற்பட்ருக்குது. அடுத்து மாணவியோட பெற்றோர்கள் இளைஞரை பிடிச்சி போலீஸ்ல ஒப்படைச்ச பிறகு தான் காதல் விவகாரம், இன்ஸ்டாவால ரெண்டுபேருக்குள்ளயும் வந்த பிரச்சனை, அதனால ஏற்பட்ட பிரேக்கப், அதனால வந்த கோபம், தற்கொலை முயற்சினு எல்லாமே வெளிய வந்துருக்குது.ரஞ்சித்மேல வழக்குப்பதிவு பண்ணின பாலவிடுதி காவல் நிலைய போலீசார் கைது பண்ணி சிறையில அடைச்சிருக்காங்க.இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | 17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம் கர்ப்பிணி துடிதுடிக்க கொ*ல| Jharkhand