ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான பேராவூர், அச்சுந்தன் வயல், லாந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அடித்த பலத்த சூறைக்காற்று காரணமாக, நங்கூரம் அறுந்து விசைப்படகுகள் கரை தட்டி சேதமடைந்ததால் மீனவர்கள் கலக்கம் அடைந்தனர். ராமநாதபுரத்தில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்க அறிவுறுத்தல்.மழையின் தாக்கத்தை பொறுத்து முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.