வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த பூனையின் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்த BMW சொகுசு காரின் மீது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும், அதன் பின்னால் வந்த அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.நள்ளிரவில் ஒன்றன் பின் ஒன்றாக 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், அரசு பேருந்தின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் மற்றும் காரில் பயணித்தவர்கள் என 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.