புதுக்கோட்டையில் பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது, டிஎஸ்பி அப்துல் ரகுமானை பாஜகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது.