ஹரியானாவை சேர்ந்த தீபக் ஷர்மா, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையிலும், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டும் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியில் துவங்கிய சைக்கிள் பயணம் டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகாவுக்கு வந்து, தற்போது தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்தடைந்தார். இவருக்கு உதகை நகர பாஜக சார்பில் நகரத் தலைவர் ரித்து கார்த்திக் தலைமையில் மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபக் ஷர்மா, பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மீது தீராத பற்று கொண்டுள்ளதாகவும், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே தமது ஆசை என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உதகையிலிருந்து கோவைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.