திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாவிப்பாளையத்தில் பிஏபி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து 4வது மண்டல தண்ணீர் திறக்கப்பட்டு மூன்று மாதங்களாக வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வாய்க்காலின் 74வது கிலோ மீட்டரில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் கசிவு இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய கிராம மக்கள், பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் மணீஸ் நாரணரேவிடம், நிவாரணம் வழங்க கோரி முறையிட்டனர்.