நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைகாற்றால் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. மேலச்சேவல், கீழ சேவல், பிராஞ்சேரி மற்றும் சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருந்தது.இந்நிலையில் வீசிய சூறைகாற்றால் தாக்கு பிடிக்க முடியாமல் குலை தள்ள தொடங்கிய வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.