ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பைரவர் கோவிலில் நடைபெற்ற அஷ்டமி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தங்களது கைகளால் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில், கோவில் முகப்பில் உள்ள 39 அடி உயர காலபைரவர் சிலைக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.