கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் ஆட்டோ ஸ்டாண்டை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதை ரத்து செய்யக் கோரி, ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். பேருந்து நிலையம் எதிரே 35 ஆண்டுகளாக இயங்கி வரும் ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற வேண்டுமென அங்குள்ள பிரபல கடைக்காரர்கள் சிலர் நகராட்சியில் முறையிட்டதாக கூறப்படுகிறது. அதனை ஏற்று நகராட்சி நிர்வாகமும் நோட்டீஸ் வழங்கியதால், அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.