Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரு மாதத்திற்கு முன்பு திருடிய செல்போனை திரும்பத் தருவதாக கூறி வரவழைத்து செல்போன் உரிமையாளர் உள்பட இருவரை கட்டையால் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கொசவன்புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவரது செல்போன் கடந்த மாதம் காணாமல்போனதாக தெரிகிறது.
இந்நிலையில் காணாமல் செல்போன் எண்ணி்ற்கு தொடர்பு கொண்டபோது, அதனை திருப்பித் தருவதாக கூறி லட்சுமணாபுரம் என்ற பகுதிக்கு சுரேஷ்பாபுவை மர்ம நபர்கள் வரவழைத்துள்ளனர்.
தனது நணபருடன் சென்ற சுரேஷ் பாபுவை சுற்றிவளைத்த 3 பேர் கொண்ட கும்பல், செல்போனை கொடுக்காமல் அவர்களை தாக்கிவிட்டு தப்பியோடினர்.
இதையும் படியுங்கள் : மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி விழா... தங்கத்தேரை இழுத்து வழிபட்ட பக்தர்கள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved