திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சத்துணவு முட்டை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநரை வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சத்துணவு முட்டை ஏற்றிச் செல்லும் அன்பழகன் தனது வாகனத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தியதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாத்தில் அவரை மது போதையில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.