போதை ஆசாமிகள் அட்ராசிட்டி : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அடுத்த மேல்முக நாடார் தெரு அருகே சிங்கம்பட்டியை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் புரோட்டா கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வைராவி குளத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி (27) அருண் (27) ராஜ் (25)ஆகிய மூவரும் மது அருந்தி விட்டு இசக்கிமுத்துவின் கடைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஓசியில் புரோட்டா கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு ஏற்கனவே 400 ரூபாய் பழைய பாக்கி தரவேண்டிய உள்ளது அதை கொடுத்த பிறகே புரோட்டா தருவேன் என கடை உரிமையாளர் இசக்கி முத்து கூறியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த கருத்தப்பாண்டி கடையின் உரிமையாளரை தாக்கி பரோட்டா போடும் கல்லை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த அலெக்சாண்டர் (33), ஐயாசாமி(55), அலெக்ஸ்(31) ஆகியோர்கள் சம்பவத்தை தட்டி கேட்டுள்ளனர் இதனால் மேலும் ஆத்திரமடைந்த கருத்தப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களான ராஜ் மற்றும் அருண் ஆகியோர் இணைந்து அவர்களை தாக்கியுள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்து காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்தார் இருப்பினும் காவலர் கண் முன்பே அந்த கும்பல் அடாவடியில் ஈடுபட்டது தனி ஆளாக வந்ததால் கண் முன் அநியாயம் நடந்தும் அதை தட்டி கேட்காமல் அந்த காவலர் ஒதுங்கி நின்று செல்போனில் வீடியோ மட்டும் எடுத்தார்.இந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வருகிறது கருத்தப்பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அலெக்சாண்டர், ஐயாசாமி, அலெக்ஸ் மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஏற்கனவே நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சமீபத்தில் தான் ஒன்பது பேர் கொண்ட கும்பல் ரோட்டில் சென்ற அப்பாவி மக்களை வெட்டி சாய்த்தது இது போன்ற சூழ்நிலையில் தற்போது மூன்று பேர் கொண்ட கும்பல் ஓசியில் பரோட்டா கேட்டு அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. Related Link அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை மீது புகார்