தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் வரை ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டே தான் இருக்கும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக ஆளுநரை ஜனாதிபதி திரும்ப பெற்றால் மட்டுமே முரண்பாடுகள் நீங்கும் என்று கூறினார். மேலும், மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்றும், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.