திருப்பதி லட்டு தயாரிப்புக்கு தாங்கள் வினியோகித்த நெய்யில் மீன் எண்ணெய் கலப்பது நடைமுறை சாத்தியமில்லை என ஏஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடப்பாண்டு ஜூலை வரை இந்த நிறுவனம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கி வந்தது. அதில் மிருக கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி விளக்கம் அளித்துள்ள இந்த நிறுவனம், நெய்யை விட மீன் எண்ணெயின் விலை அதிகம் என்பதால் அதனை கலப்பது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது.அது மட்டுமின்றி மீன் எண்ணெயை கலந்தாலும், அதன் வாடை உடனே தெரிந்து விடும் என இந்த நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.1998 முதல் தாங்கள் நெய்யை தயாரிப்பதாகவும், அதற்கான பால் 102 தர சோதனைகளுக்குப் பிறகே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.