புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார். வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்படும் காளைகளை பிடிக்க உரிமையாளர்கள் கயிற்றுடன் கலெக்சன் பாயிண்ட் அருகே நின்றிருந்த நிலையில், அதனருகே நின்று கொண்டிருந்த முத்து அடைக்கலம் என்பவரை காளை முட்டியது.