Also Watch
Read this
By: Manigandan Raja

அரசுப் பேருந்தை வழிமறித்த யானை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது இங்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்பு திடீரென ஒற்றை யானை வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா எனக் கூறியதால் யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
உடுமலை அருகே அரசு பேருந்தை யானை வழிமறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved