news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்னாள் மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
tv

Also Watch

tv

Read this

முன்னாள் மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

திருவண்ணாமலை

20

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvm

வந்தவாசி அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 75 ஆவது ஆண்டு பவள விழா - 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு கட்டி கொடுத்தனர்.

ரூ. 25 லட்சம் மதிப்பிலான சீர்
தேசூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75ஆம் ஆண்டு பவள விழாவில் முன்னாள் மாணவர்கள் 25 லட்சம் ரூபாய்க்கு மேலான பணிகளை இணைந்து பள்ளிக்கு செய்தனர்.
வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 75வது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிக்கு ஒப்படைத்த முன்னாள் மாணவர்கள்
இதனை கொண்டாடும் வகையில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து கூட்ட அரங்கம், காந்தியடிகள் சிலை, பிரமாண்டமான நுழைவாயில், கலையரங்கம், பள்ளி மாணவர்களுக்கு கழிவறைகள், உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னெடுத்து கட்டி அமைத்து, ஆரணி எம்.பி. தரணிவேந்தன், வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் ஆகியோர் இணைந்து பள்ளிக்கு ஒப்படைத்தனர்.

மிக சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி
முன்னதாக பள்ளிக்குத் தேவையான ஃபேன் மற்றும் நாற்காலி ஆகியவற்றை மேளதாளம் முழங்க சீர்வரிசையாக கொண்டு வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் தேசூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Link
விஜய் படம் ரிலீஸ் ஆக உதவினோம்

விஜய் படம் ரிலீஸ் ஆக உதவினோம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
6 hrs 22 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved