கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாறுதல் செய்ய வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தினர். பாலியல் சம்பவத்தால் பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து விட்டதால் எஸ்.பி. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.