புதிய தேர் வெள்ளோட்டம் : நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலமாகும். இந்த திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்கள் உதவியுடன் சார்பில் 40 லட்ச ரூபாய் செலவில் சுவாமிக்கு புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன் பணிகள் நிறைவடைந்து இன்று வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜை நிறைவு பெற்று புனித கலசம் திருத்தேருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருத்தேரை ஆரூரா தியாகியாச என முழக்கமிட்டு வடம்பிடித்து இழுத்து சென்றனர். Related Link கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்