Also Watch
Read this
By: Web Team

மதுரையை தலைமையிடமாகக் கொண்ட அப்சல் நிதி நிறுவனம், பல நூறு கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில், அந்நிறுவன நிர்வாகி செந்தில்வேலின் மனைவி உமா மற்றும் சகோதரர் செல்வகுமார் கைது செய்யப்பட்டனர்.
முதலீடு பெற்று மோசடி செய்ததாக பலர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்த தர, ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் குழுவை நியமித்தும், எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அக்குழு கலைக்கப்பட்டது.
இதனையடுத்து, முதலீட்டாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறு மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
செந்தில்வேல் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இயக்குநர்களான இருவரும் கைது செய்யப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved