வேலூரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சத்துவாச்சாரி, வள்ளலார், கிரீன் சர்க்கில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி,மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.