திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா திரைப்பட பாடல் பாடியும், நடனமாடியும் மாணவர்களை உற்சாகபடுத்தினார். பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி நடைபெற்ற திருவிழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகையும்,பாடகியுமான ஆண்ட்ரியா நீல நிறத்தில் கவர்ச்சிகரமான ஆடையை அணிந்து மேடையில் ஏறி திரைப்படப்பாடலை ரம்மியமாக பாடி அசத்தினார். மேலும், அவர் பாடல் பாடியதற்கு ஏற்றவாறு நளினமாக நடனமாடி கல்லூரி மாணவ, மாணவிகளை வெகுவாக கவர்ந்தார்.