தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அபுதாபியில் வேலை பார்த்து வந்த திருச்சியை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது தனது நண்பருடன் சேர்ந்து கல்லணைக்கு குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ராஜராஜன் திடீரென நீரில் மூழ்கி மாயமான நிலையில் தோகூர் சிவன் கோவில் அருகே தீயணைப்பு துறையினர் அவரை சடலமாக மீட்டனர்.