Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் நடைபயிற்சி மேற்கொண்ட துணிக்கடை உரிமையாளர் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாளவாடியை சேர்ந்த கிஷோர்குமார், தலமலை சாலையில் காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, அவர் காணாமல் போனதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில்,அங்குள்ள ஓடைக்கு அருகில் கிடந்த கிஷோர் குமாரின் டீசர்ட், செருப்பு மற்றும் ஹெட்போனை கைப்பற்றிய போலீஸார், அவரை மர்மநபர்கள் கடத்தினார்களா என்ற கோணத்தில் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved