கோவை மாவட்டம், ஆழியார் சின்னார் பதி அருகே வால்பாறை சாலையில் உலா வரும் காட்டு யானையை வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். யானை சில்லி கொம்பன் உணவு தேடி சாலையில் ஒய்யாரமாக, நடந்து சென்றதை கண்ட வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். யானை எப்பொழுது வேண்டுமானாலும் ஊருக்குள் வரக்கூடும் என்பதால் அதனை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை, பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கமாக உள்ள நிலையில், இன்று காலை ஆழியார் சின்னார் பதி அருகே வால்பாறை சாலையில், சில்லி கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை உணவு தேடி சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது.