Also Watch
Read this
By: Web Team

பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையிலான கொழுக்கட்டை படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையிலிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையை பக்தர்கள் தொட்டில் மூலம் சுமந்து சென்று உச்சிப்பிள்ளையாருக்கு படையலிட்டனர்.
இதனையடுத்து, நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் உச்சி பிள்ளையாரை தரிசித்தனர். பிள்ளையாரை தரிசித்த பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved