நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆள் இல்லாத இரு வீடுகளை சேதப்படுத்திய கரடி, உள்ளே நுழைந்து பொருட்களை சூறையாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.