ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் தம்பதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொளுந்துரையை சேர்ந்த தம்பதி காளீஸ்வரன் - பாரதி தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள், வேந்தோணி பகுதியில் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழி சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே வேகமாக சென்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் தம்பதி படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.