கோவையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த தனியார் பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கொளுத்தும் வெயிலில் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி சாலையில்,YWCA என்ற பெயரில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகில் வரும் புதிய மேம்பாலத்திற்காக பள்ளியின் நிலத்தை நெடுஞ்சாலை துறை கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நிர்வாகம் பள்ளியை மூடப்போவதாக அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளியை மூடக்கூடாது என கூறி, தங்களது குழுந்தைகளுடன் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.