திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, வீட்டில் பதுங்கியிருந்த 7அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு பிடிபட்ட நிலையில், அதற்கு கற்பூரம் ஏற்றி மூதாட்டி வழிபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது. தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் தனியாக வசித்து வரும் 60 வயதான முனியம்மாள் வீட்டில் புகுந்த நல்ல பாம்பு கடந்த 3 நாட்களாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வீட்டில் தென்னை மட்டைகளுக்கு இடையில் மறைந்திருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.