Also Watch
Read this
By: Web Team

நாட்றம்பள்ளி அருகே வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார். வெலக்கல்நத்தம் பகுதியில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கூச்சலிடவே, தப்பியோடியதாக பூபாலன் என்பவனை போலீசார் பிடித்துள்ளனர். அப்போது தப்பி ஓடிய இவனது கூட்டாளியான ஸ்டீபன் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது வாகனத்தில் அடிபட்டு பலியானது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved