நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிளைவுட் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஹைதராபாத்தில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரியை, அதன் ஓட்டுநர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிறத்தியுள்ளார். அப்போது, லாரியின் டயர் வெடித்ததில் எதிர்பாராதவிதமாக டீசல் டேங்கில் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், பிளைவுட் பொருட்களுடன் லாரி எரிந்து சேதம் அடைந்தது. மேலும், அங்குள்ள ஆட்டோ மொபைல் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : நில பிரச்சனையில் கொ*ல மிரட்டல் விடுத்த வட்டாட்சியர்?