news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீண்ட நாட்களாக இருந்த முன்பகை
tv

Also Watch

tv

Read this

நீண்ட நாட்களாக இருந்த முன்பகை

ஆவல்நத்தம், தூத்துக்குடி

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கிராமத்தின் நுழைவுவாயிலில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இளைஞர். இளைஞர் உயிரிழந்ததை கேட்டு கதறி அழுத தாய். தாய் அளித்த வாக்குமூலத்தை வைத்து கொலையாளிகளை தேடி அலைந்த போலீஸ். வெளியூருக்கு தப்பித்து போக பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த மூன்று பேரை கஸ்டடியில் எடுத்து விசாரணை. இளைஞரை கல்லால் அடித்து கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?

கிராமத்தில் நுழைவு வாயிலில் சடலமாக கிடந்த கார்த்திக்
நள்ளிரவு நேரம், ஆவல்நத்தம் கிராமத்த நோக்கி கிராம மக்கள் போய்ட்டு இருந்தாங்க. அப்ப ஊர் நுழைவாயில்ல சடலம் ஒன்னு கிடந்துருக்கு. இதபாத்த மக்கள், சடலத்து கிட்ட போய் பாத்துருக்காங்க. அப்ப கார்த்திக்-ங்குற இளைஞர் முகம் சிதைஞ்ச நிலையில, உடல் ஃபுல்லா காயங்களோட உயிரிழந்து கிடந்தாரு. இந்த விஷயத்த கேட்டு கார்த்திக்கோட தாய் மற்றும் உறவினர்கள் எல்லாரும் அலறியடிச்சு ஓடி வந்து மகன் கிடந்த கோலத்த பாத்து கதறி அழுதுருக்காங்க. அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணையில இறங்குனாங்க. கார்த்திக்கிற்கு என்ன ஆச்சு, நைட்டு நேரத்துல அவரு ஏன் ஊர விட்டு வெளியில வந்தாரு, அவர இங்க கூப்டு வந்தது யாருன்னு கேட்ருக்காங்க. அதுக்கு தாய், என் மகன் அமைதியா வீட்ல உட்காந்துருந்தான், அப்ப முனியசாமி-ங்குற நபர் தான், என் மகன கூப்டு போனான்னு சொல்லிருக்காங்க.

முனியசாமி என்பவரை வலைவீசி தேடி வந்த போலீஸ்
இத வச்சு முனியசாமியோட வீட்டுக்கு போய்ருக்காங்க போலீஸ். ஆனா வீட்ல முனியசாமி இல்லை. இதனால அவரு மேல சந்தேகமடைஞ்ச போலீஸ், முனியசாமி எங்க தப்பிச்சு போனாருன்னு தெரிஞ்சுக்க, அவரோட உறவினர்கள் கிட்ட விசாரிச்சுருக்காங்க. ஆனா அவங்க எங்களுக்கு ஒன்னும் தெரியலன்னு சொல்லிட்டாங்க. அதுக்கடுத்து முனியசாமிய தேடி பல இடங்கள்ல அலைஞ்சுருக்காங்க போலீஸ். ஆனா எங்க தேடியும் முனியசாமி கிடைக்கல. இதுக்கிடையில போலீசார் கொலையாளிய தேடி கோவில்பட்டி புது பஸ் ஸ்டாண்டுக்கு போய்ருக்காங்க. அப்ப வெளியூருக்கு தப்பிச்சு போக பேருந்துக்காக நின்னுட்டு இருந்த முனியசாமி, அய்யாதுரை, வேல்முருகன் ஆகிய மூணு பேரும் போலீச பாத்த உடனே தப்பிச்சு போக பாத்துருக்காங்க. ஆனா அவங்கள சுத்தி வளைச்சு பிடிச்ச போலீஸ், அவங்கள போலீஸ் ஸ்டேஷன் கூப்டு போய் விசாரிச்சுருக்காங்க. அதுல தான் கார்த்திக் ஏன் கொலை செய்யப்பட்டார்ன்னு? தெரியவந்துச்சு.

விசாரணையில் வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்
தூத்துக்குடியில உள்ள கோவில்பட்டி ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு கல்யாணமாகி சுப்புலட்சுமி-ங்குற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்காங்க. இவரும் அதே பகுதியைச் சேந்த வேல்முருகன், அய்யாதுரை, முனியசாமின்னு மூணு பேரும் க்ளோஸ் ப்ரண்ட்ஸ். இதுல கார்த்திக் மதுகுடிக்க மாட்டாரு. மற்று மூணு பேரும் அடிக்கடி மதுகுடிச்சுட்டு கிராம மக்கள் கிட்டயும் கார்த்திக் கிட்டயும் அடிக்கடி பிரச்னை பண்றதையே வழக்கமா வச்சுருந்துருக்காங்க. இதனால கார்த்திக்கிற்கும் அந்த நபர்களுக்கும் பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. 4 பேருமே ஆவல்நத்தம் கிராமத்துல உள்ள கண்மாய்ல மீன்பிடிச்சு அத வித்து சம்பாதிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இந்த பிரச்னை ஆனதுல இருந்து கார்த்திக் அவங்க கூட மீன் பிடிக்க போறது இல்லை. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி, கண்மாய்ல உட்காந்து கார்த்திக் மீன் பிடிச்சுட்டு இருந்தாரு.

கார்த்திக்கிடம் அடிக்கடி பிரச்னை செய்து வந்த மூன்று பேர்
அப்ப அங்க வந்த மூணு பேரும், கார்த்திக் கிட்ட பிரச்னை பண்ணிருக்காங்க. நீ இனிமே, இங்க உட்காந்து மீன் பிடிக்கக் கூடாது, வேற எங்கையாவது போய்ட்டு மீன் பிடின்னு சொல்லிருக்காங்க. அதுக்கு கார்த்திக், இது என் ஊரு, நான் இங்க தான் நான் மீன் பிடிப்பேன், நீங்க வேற எங்கையாவது போய் மீன் பிடிங்கன்னு சொல்லிருக்காரு. இதனால ரெண்டு தரப்புக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. இந்த பிரச்னையே அவங்களுக்குள்ள முன்பகையாவும் மாறிருக்கு. இதுக்கிடையில சம்பவத்தன்னைக்கு, நைட்டு நேரத்துல கார்த்திக்கோட வீட்டு பக்கத்துல உட்காந்து மூன்று பேரும் மது குடிச்சுட்டு இருந்தாங்க. அப்ப அங்க வந்த கார்த்திக், எதுக்கு குடியிருப்பு பகுதியில உட்காந்து மது குடிக்கிறிங்க, இங்க குழந்தைங்க, பெண்கள்ன்னு எல்லாரும் இருக்காங்க, அதனால இங்க உட்காந்து நீங்க மதுகுடிக்க கூடாது, உடனே இங்கருந்து இடத்த காலி பண்ணுங்கன்னு சொல்லிருக்காரு.

வேல்முருகன், அய்யாதுரை, முனியசாமி ஆகியோர் கைது
அப்ப அங்கருந்து அமைதியா கிளம்புன ரெண்டு பேரும் ஊரோட நுழைவு வாயில்ல நின்னு கார்த்திக்க கொலை பண்ண திட்டம் போட்ருக்காங்க. அதுபடி முனியசாமி, கார்த்திக்கோட வீட்டுக்கு போய்ட்டு உன் கூட கொஞ்சம் பேசனும், நமக்குள்ள இருக்க பிரச்னையே நாமே பேசி முடிச்சுக்கலாம்ன்னு சொல்லி கூப்டு போய்ருக்காரு. அப்ப ஊரோட நுழைவு வாயில்ல நின்னு 4 பேரும் பேசிட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல அவங்களுக்குள்ள மறுபடியும் பிரச்னை ஏற்பட்டிருக்கு. இதனால கடும் கோபமான நபர்கள் கீழ கிடந்த கல்ல எடுத்து கார்த்திக்க சரமாரியா தாக்கிருக்காங்க. இந்த தாக்குதலால வலி தாங்க முடியாத கார்த்திக் சம்பவ இடத்துலையே விழுந்து உயிரிழந்துட்டாரு. ஆனா அப்பவும் ஆத்திரம் தீராத கும்பல் கீழ கிடந்த கற்கள எடுத்து கார்த்திக்கோட முகத்துலையே போட்டு வெறிய தீர்த்துருக்காங்க. அடுத்து வெளியூர் தப்பிச்சு போக அந்த மூணு பேரும் கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு போய்ருக்காங்க. ஆனா கார்த்திக்கோட தாய் சொன்ன தகவல வச்சு கொலையாளிகள கண்டுபிடிச்ச போலீஸ் வேல்முருகன், அய்யாதுரை, முனியசாமின்னு மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

Related Link
போலீஸை திசை திருப்ப பலே பிளான்

போலீஸை திசை திருப்ப பலே பிளான்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

4
5 mins agoshare
கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved