news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையோரம் நின்றிருந்த 5 பேர் மீது அதிவேகமாக மோதிய கார்
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் நின்றிருந்த 5 பேர் மீது அதிவேகமாக மோதிய கார்

சிங்கம்புணரி - சிவகங்கை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிவேகமாக மோதிய கார்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மேல தெருவை சேர்ந்த திமுக பிரமுகருக்கு சொந்தமான கார் எனக் கூறப்படும் காரை எடுத்துக் கொண்டு மேலத்தெரு வழியாக சந்திரன் கூடம் நோக்கி வந்த பொழுது மேலூர் சாலையில் ஏறுவதற்கு முன் வேகமாக வந்துள்ளது.

அந்த சமயம் சந்திவீரன்கூடம் அருகில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சுமதிபுரத்தைச் சேர்ந்த வடிவேல், மனப்பட்டியை சேர்ந்த ஜீவா,டீ கடையில் வெளியில் டீ குடித்து கொண்டிருந்த கீழத் தெருவை சேர்ந்த டைலர் வடிவேல் அவரிடம்.

இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டவாறு பேசிக் கொண்டிருந்த வேளார் தெரு பகுதியைச் சேர்ந்த மீனாட்சி,அவரது மகன் நவீன் ஆகியோர் மீது கண் இமைக்கும் நேரத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி ஐந்து பேருக்கும் பலத்த காயம் ஏற்படுத்தி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி மின்கம்பம் உடைத்து நின்றது.

திடீரென ஏற்பட்ட விபத்தால் அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை தூக்கி 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து.

ஐந்து பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த மீனாட்சி,மற்றும் கையில் படுகாயம் அடைந்த மீனாட்சியின் மகன் நவீன் மற்றும் டைலர் வடிவேல் ஆகிய
மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சிங்கம்புணரி போலீசார் விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய ஓட்டுனரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். நின்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வேகமாக வந்த கார் மோதி 5 பேரை தூக்கி வீசும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பேசும் பொருளாகி உள்ளது.

Related Link
புகார் அளித்து 4 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை

புகார் அளித்து 4 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
7 hrs 4 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved