அரியலூர் மாவட்டம், வாரணவாசியில் சமையல் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில், சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருச்சியிலிருந்து அரியலூருக்கு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி, வாரணவாசி அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறி பெரும் புகையுடன் பல அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழும்ப, அவ்வழியாக சென்ற மக்கள் பதறி அடித்து கொண்டு ஓடினர்.விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் துரிதமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே ஓடிய நாயால், பிரேக் அடித்த போது, லாரி கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக, உயிர் தப்பிய லாரி ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையும் பாருங்கள் - அரியலூரை அதிர வைத்த சிலிண்டர் விபத்து, பகீர் கிளப்பும் தகவல் | ariyalur | cylinder blast