திருவள்ளூர் மாவட்டம் மணவூர் அருகே மகனுடன் ஆற்றில் குளிக்க சென்ற தந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத விதமாக இருவரும் அடித்துச் செல்லப்பட்ட போது அங்கிருந்த இளைஞர்கள் சிறுவனை காப்பாற்றினர். சிறுவனின் தந்தையை நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.