'ப்ளீஸ், கொஞ்சம் கதவ திறங்க...' குட்டிகளை வாயில் கவ்வியவாறு தவித்த தாய் நாய், கலங்க வைத்த பாச போராட்டம்... திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் கிராமத்தில் நாய் ஒன்று, முட்புதரில் ஐந்துக்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்ற நிலையில், அந்த நேரம் பாத்து கனமழை பெய்துள்ளது. அந்த முட்புதரை சுற்றி தண்ணீர் அதிகமாக சூழ்ந்து விட்டது. இதனால், தாய் நாய், இப்போ என்ன பண்ணுறதுன்னு யோசிச்ச நொடியே, குட்டிகளை வாயில் கவ்வியவாறு, வீடு வீடாக சென்று 'ப்ளீஸ், கொஞ்சம் கதவ திறங்க, என்னோட குட்டிகளை நா காப்பாத்தணும்’ என்று சொல்லுற மாதிரி தாய் நாயின் பாச போராட்டம், கண் கலங்க வைத்தது. இறுதியில், திறந்து இருந்த ஒரு வீட்டில் தாய் நாய் ஒவ்வொரு குட்டியாக வாயில் கவ்வி கொண்ட வந்ததை நேரில் பார்த்த நபர் ஒருவர், தாய் நாய்க்கு உதவி செய்துள்ளார். மேலும் அங்குள்ள பெண்மணி, குட்டி நாய்களுக்கு பால், பிஸ்கட் கொடுத்த காணொலி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையும் பாருங்கள் - "தாயை விட சிறந்த சக்தி எதுவும் இல்லை" மழையில் குட்டியை காக்க தாய் நாய் நடத்திய பாசப் போராட்டம்