Also Watch
Read this
By: Fyrose Banu

தாளவாடி அருகே முதியனூர் கிராமத்தில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று விவசாய நிலத்தில் நுழைந்த போது சுருண்டு கீழே விழுந்தது. இதனையடுத்து தாளவாடி வனத்துறையினர் கிரேன் மூலம் யானையை பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தி அதனை நடக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்த சோகம்
இதனை தொடர்ந்து மயக்கமுற்ற யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று லேசர் ஔி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பெண் யானை சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தது. இது வன ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved