காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் வைத்த போது மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம், பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ்-தாட்சாயணி தம்பதியின் 12 வயது மகன், தனது பாட்டி வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட குளியலறையில் வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்துள்ளார். அப்போது, தண்ணீர் சூடாகிவிட்டதா என்பதை பார்க்க கையை வைத்த நிலையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.