ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் ஆன்லைன் மூலம் இழந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் மீட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்துள்ளனர். வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமாரிடம் வங்கி விவரங்களை கேட்டு மர்ம நபர் மோசடி செய்த நிலையில், தனிப்படை போலீசார் பணத்தை மீட்டுள்ளனர்.