சென்னை நங்கநல்லூர் அருகே இரும்பு கேட் சாய்ந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. எம்.எம்.டி.சி (( MMTC )) காலனி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டின் கேட்டை மூடியபோது நொடிப்பொழுதில் சாய்ந்த இரும்பு கேட் சிறுமி மீது விழுந்தது.