தியாகி இமானுவேல் சேகரனாரின் 67வது நினைவு தினத்தை ஒட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற மதிமுகவினர் காக்க வைக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நிலையில், மதிமுக நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது அமைச்சர் உதயநிதியின் வருகையை காரணம் காட்டி மதிமுகவினரை போலீசார் காக்க வைத்தனர். இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியதால், ஆத்திரமடைந்த மதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.