ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி கோப்பைகளை வழங்கினார். அக்ரவரம் பகுதியில் தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. 14, 16, 18 மற்றும் 23 ஆகிய வயது பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் கோவை, ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.