Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 12:16 PM
By: Web Team

சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமாபுரம் திருவள்ளூர் சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் திமிதி திருவிழாவின்போது ராமாபுரம் காவல் நிலைய பெண் காவலரிடம் கண்ணன் என்பவர் மதுபோதையில் அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்டது. வன்கொடுமை, பெண்ணை இழிவுபடுத்துவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ஒரு ஆண்டு சிறையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved