ராணிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். அசநெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் சஞ்சய், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி மகன் குமரேசன் ஆகியோர் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த வேன் மோதியது.