விஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள ஆர்யன் திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.