இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கருப்பி' நாய் உயிரிழந்தது. தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த சத்தத்தை கேட்டு சாலையில் ஓடியபோது வாகனம் மோதி உயிரிழந்தது. இதையடுத்து நாயின் உரிமையாளரும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவருமான விஜயமுத்து என்பவர், நாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தார். கருப்பி நாய் மறைவுக்கு, பரியேறும் பெருமாள் பட ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.