Also Watch
Read this
By: Manigandan Raja

11 நாட்களில் உலகளவில் ரூ.50 கோடி வசூல் :
நடிகர் கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள யூத் திரைப்படம், 11 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ளார்.
கலங்காதே ராசாவே பாடல் வீடியோவை வெளியிட்ட படக்குழு :
செல்வராகவன் நடித்து வரும் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் "தங்க ரத்தினமே" பாடலை தொடர்ந்து கலங்காதே ராசாவே பாடல் வீடியோ வெளியானது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ஏப்ரல் 10-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
சிவாஜி கணேசன் பேரன் அறிமுகமாகும் படம் :
டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் "லெனின் பாண்டியன்" திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரனும், நடிகை ரோஜாவும் நடிக்கின்றனர். ஆடு மேய்க்கும் பெரியவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்பு தருவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
"மின்னல் அடிக்குதடி" பாடலை ஆதித்யா பாடியுள்ளார் :
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள "டபுள் ஆக்குபன்சி" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. "மின்னல் அடிக்குதடி" என்கிற பாடலை ஸ்வேதா பிரபாகரன் வரிகளில், சாம் சி.எஸ் இசையில் ஆதித்யா பாடியுள்ளார்.

ரொமான்டிக் பேன்டஸி திரைப்படமான இதில், சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved