news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பிரதீப் ரங்கநாதன் முதல் தாய் கிழவி வரை
tv

Also Watch

tv

Read this

பிரதீப் ரங்கநாதன் முதல் தாய் கிழவி வரை

சினிமா செய்திகள்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா  நியூஸ்

LIK திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 3-வது பாடல் வெளியீடு :


பிரதீப் ரங்கநாதன்
நடித்துள்ள "எல்.ஐ.கே." என்கிற "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "அடாவடி" என்கிற 3-வது பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை ரோகேஷ், விக்னேஷ் சிவன் வரிகளில் மதிச்சியம் பாலா பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம், ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு : 


ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான தாய் கிழவி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கிய இப்படத்தில் சிங்கம்புலி, பாலா சரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துரந்தர் - 2 ரிலீஸான 11 நாட்களில் ரூ.1,363 கோடி வசூல் :

ரன்வீர் சிங்கின் துரந்தர் இரண்டாம் பாகம், வெளியான 11 நாட்களில், முதல் பாகத்தின் மொத்த வசூலையும் முடியடித்துள்ளது. துரந்தர் முதல் பாகம் உலகளவில் மொத்தம் ஆயிரத்து 307 கோடி ரூபாய் வசூலித்திருந்த நிலையில், துரந்தர் இரண்டாம் பாகம் ஆயிரத்து 363 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

சூரியின் 7வது திரைப்படத்தில் நடிக்கிறார் மமிதா பைஜு?

சூரியின் 7ஆவது திரைப்படத்தில் மமிதா பைஜுவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மண்டாடி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள
சூரி, அடுத்ததாக ரவிக்குமாருடன் இணைகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Related Link
இன்றைய சினிமா  நியூஸ்

இன்றைய சினிமா நியூஸ்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3000ற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

0
55 mins agoshare
சேலம் முருகன் கோவில்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved